Saturday, March 24, 2007

சூப்பர் எட்டுக்கு India டாட்டா காமிச்சாச்சு!

இலங்கை முதலில் பேட் செய்து 254 ரன்கள் எடுத்தபோதே, இந்தியா ஜெயிப்பது கடினம் என்று தோன்றியது. அதனால், எனது இந்தப் பதிவில் இப்படி ஒரு கமெண்ட் போட்டிருந்தேன்!

IND vs SL at WC 2007
********************

India won the toss and put SL into bat. SL scored 254/6 in 50 overs. At one stage, SL were 133/4 and India lost the initiative to keep SL total around the 230 mark. That would have been manageable / chaseable, I think !

Anyway, Let us wish the Indian Team well and pray for a famous Indian victory :) Only on 3 previous occasions, WI (twice) and Pakistan have chased more than 250 runs and won on this very ground !!!

ஆனாலும், கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. (பாழாப்போன கிரிக்கெட்டைப் பார்த்தும், உருப்படாத நம்ம பயங்களை நம்பியும் எத்தனை வருடங்கள் ஓட்டியிருகேன், ஸாரி, வேஸ்ட் பண்ணியிருக்கேன் :)) நானே, ஒரு ஸ்கோர் ஷீட் தயார் பண்ணி, அதை fillup செய்ய ஆரம்பித்தேன்! (இதெல்லாம் ஒரு செண்டிமெண்ட்ங்க, 29 ஓவர்கள் வரைக்கும் ஆட்டத்தைப் பார்த்துட்டு, ஸ்கோர் 112/6 என்றவுடன், டிவி switch-off!) சச்சினே பிரஷரை கையாள முடியாதபோது, யுவராஜையும், தோனியையும் குற்றம் சொல்லி என்ன பயன், சொல்லுங்க ? முரளி என்ற சூப்பர் ஸ்பின்னரை எதிர்த்து ஆடுவது அவர்களுக்கு அவ்வளவு எளிதான விஷயமல்ல.

சரி, 44-3 என்ற ஸ்கோரிலிருந்து, 99 வரைக்கும் டிராவிட்டும் சேவாக்கும் எடுத்து வந்தபோது, சரி, ஒரு tight finish-க்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இப்போதும் கூறுகிறேன், சேவாக் கடைசி வரை நின்றிருந்தால், இந்தியா வென்றிருக்கும் என்று திடமாகக் கூறுவேன். அவர் ஒரு proven match winner என்று முன்னமே கூறியிருக்கிறேன்! இந்திய அணியில், அவரும் யுவராஜும் மட்டுமே பிரஷரை கையாளக் கூடியவர்கள் என்பது என் கருத்து! சேவாகையும், தோனியையும் முரளி வீழ்த்தினார், யுவராஜ் அனாவசியமாக ரன் அவுட் ஆனார்.

கங்குலியும், சச்சினும் விக்கெட் இழந்ததற்குக் காரணம், பிரஷரே என்பது என் எண்ணம்!!! உத்தப்பா வாஸ் போட்ட பந்தை வேகமாக அடித்த அடி, வாஸின் முட்டி பெயர்ந்திருக்க வேண்டியது, அவர் அதிர்ஷ்டம், பந்து கையில் ஒட்டிக் கொள்ள, உத்தப்பா caught and bowled!

இனிமேல், இந்திய கிரிக்கெட்டைப் பற்றி பதிவு போட்டால், என்னை செருப்பால், ஸாரி, பிய்ந்த செருப்பால் அடிக்கவும்!!! ஒரு வேளை பெர்முடா அபாரமாக ஆடி பங்களாதேஷை வீழ்த்தினால், சூப்பர் எட்டு சுற்றுக்குச் செல்ல நமக்கு இன்னும் வாய்ப்புள்ளது (எ.அ.பாலா, நீ திருந்தவே மாட்டியாடா? ;-))

தொடர்புடைய சுட்டி: உலகக்கோப்பை இந்தியாவுக்குத் தான்

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 316 ***

12 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test Message, sorry, DAMAGE :)

-L-L-D-a-s-u said...

என்னத்தைச் சொல்றது.

//When India wakes up tomorrow, they will be disappointed- Chappel//
அடப்பாவி சாப்பல், இதுதான் நீ இந்தியாவை புரிஞ்சுக்கிட்ட லட்சணமா? யார்ரா நேற்று இந்தியாவில தூங்கியிருப்ப்பா.. எந்திருச்சி disappoint ஆகுறதுக்கு

Gopalan Ramasubbu said...

//இனிமேல், இந்திய கிரிக்கெட்டைப் பற்றி பதிவு போட்டால், என்னை செருப்பால், ஸாரி, பிய்ந்த செருப்பால் அடிக்கவும்!!! //

:)..It's okay..Less tension more work.

நாமக்கல் சிபி said...

//இனிமேல், இந்திய கிரிக்கெட்டைப் பற்றி பதிவு போட்டால், என்னை செருப்பால், ஸாரி, பிய்ந்த செருப்பால் அடிக்கவும்!!! //

:))

//ஒரு வேளை பெர்முடா அபாரமாக ஆடி பங்களாதேஷை வீழ்த்தினால்,//

அடங்கொக்கா மக்கா!

//Test Message, sorry, DAMAGE //

:))))))))))))))))))))))))))

Hariharan # 03985177737685368452 said...

இந்த ஆங்கிலேர்களது கலோனியல் விளையாட்டுக்கு மட்டும் இன்னும் முழுசாக அடிமைப்பட்டுக்கிடக்கும் இந்தியர்களுக்கு இந்த அடி அவசியம்தான்!

பங்களாதேஷிடம் தோற்றதற்கு நாண்டுக்கிட்டுச் சாகலாம் நம் வீரர்கள்!
விளம்பரத்தில் டைகர்கள். பிசுக்கோத்துப்பையன்கள்!

புக்கிக்களின் பிக்கீஸ் ஆகி மாட்ச் பிக்ஸ் ஆகி ஆடிய இன்னொரு "கெட்ட ஆட்டம்"!

பாப் உல்மரை புக்கீஸ் பேய் பிசாசுங்க கொன்னுபோட்டானுங்க! சேப்பல் கிட்ட செப்பல் இருக்கோன்னு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால ஜஸ்ட் எஸ்கேப்!

ஸ்டேடியம் தாண்டி எகிறிச்சென்ற சிக்ஸர் பால் மாதிரி இந்தியதேசம் விட்டு எகிறவேண்டியது இந்தியாவின் கிரிக்கெட் வெறி !

மணிகண்டன் said...

//இனிமேல், இந்திய கிரிக்கெட்டைப் பற்றி பதிவு போட்டால், என்னை செருப்பால், ஸாரி, பிய்ந்த செருப்பால் அடிக்கவும்!!! //

நானும் இந்த முடிவுக்கு வந்துட்டேன் பாலா. நம்பி ஏமாந்தது போதும்.

முன்ன நீங்க இப்படை வென்றால் கிரிக்கெட்டுக்கு அவமானம்னு சொன்னதை, இலங்கை போட்டி முடியற வரைக்கும் அப்படி சொல்ல்வேணாமென்னு சொன்னேன். இப்ப நானும் அதை ஒத்துக்கறேன்.

enRenRum-anbudan.BALA said...

-L-L-D-a-s-u,
வாங்க, மூட்அவுட் பண்ணிட்டாங்க, நண்பரே :( சேப்பலுக்கு என்னங்க பெரிய வருத்தம், நட்டம் நாம் தோற்றதில் இருக்க முடியும் ??? அவரு கிடக்கறாரு!

கோபால்,
ஒங்க அட்வைஸை இனிமேல் ·பாலோ பண்றேன் :)

enRenRum-anbudan.BALA said...

நாமக்கல்லாரே,
ரசித்ததற்கு முதற்கண் நன்றி :)))
நல்லா ஆப்பு வச்சாங்க, நம்ம உருப்படாத பயங்க :( ஆனாலும், நம்மளுக்கு தான் கொஞ்சமும் வெட்கமும், மானமும் கிடையாதே, அடுத்த இந்தியா மேட்ச் எப்ப வரும்னு நாயா பேயா அலைவோம் ;-)

enRenRum-anbudan.BALA said...

Hariharan,
வாங்க, என்ன, நம்மளை விட ரொம்ப சூடா இருக்கீங்க போல :) பல பேருக்கு நம்ம ஊருலே கிரிக்கெட், secondary மதம் மாதிரி !!! அதான், மதம் (பைத்தியம்) பிடிச்சு அலையறோம் :(

enRenRum-anbudan.BALA said...

மணிகண்டன்,
என் இரங்கல்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன், ஒரு ப்ளாக் எல்லாம் ஆரம்பிச்சு, மிக அருமையாக WC 2007-ஐ நீங்க கவர் பண்ணத் தொடங்கி அது நல்லா போயிட்டிருக்கு, நம்ம பயங்க தான் கவுத்துட்டாங்க :(

'இப்படை வென்றால் கிரிக்கெட்டுக்கு அவமானம்' எழுதும்போதே, எனக்கு இலங்கையை ஜெயிப்பாங்களான்னு சந்தேகம் இருந்தது. அதே நேரத்தில், சப்பை டீமான பங்காளாதேஷிடம் தோற்றது தான், என்னளவில், மிகப் பெரிய வெட்கக்கேடு, குற்றம் :(

பங்களாதேஷையும், பெர்முடாவையும் வென்று, சுலபமாக அடுத்த சுற்றுக்கு போயிருக்க வேண்டும், இல்லையா ????? பங்களாதேஷிடம் தோற்றது தான் பெரிய அவமானமே, அதுவும் உலகக் கோப்பை ஆட்டத்தில்!!!

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

Test comment

Muse (# 01429798200730556938) said...

நவ்ரச நாயகன் திராவிட் ' பராசக்தி' பாணியில் பேசினால்?!!

"உலகக் கோப்பை. பல விசித்திரமான போட்டிகளைச் சந்தித்திருக்கிறது.. விசித்திரமான ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் , இந்தப் போட்டி விசித்திரமும் அல்ல. நான் விசித்திரமான ஆட்டக்காரனும் அல்ல. போட்டிகளிலே கலந்து கொண்டு சர்வசாதாரணமாக தோல்விகளை எந்தக் கேவலமும் இன்றி் தோளிலே சுமந்து வரும் சாதாரண இந்திய கேப்டன் தான் நான்.

பங்களாதேசிடமும் , இலங்கையிடமும் தோற்றேன். உலகக் கோப்பையைத் தவற விட்டேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். பங்களாதேசிடமும் இலங்கையிடம் தோற்றேன் - அவர்களிடம் தோறக் வேண்டுமே என்பதற்காக அல்ல. ஆனால் நேரு வகுத்த பஞ்சசீலக் கொள்கையின் படி அண்டை நாடுகளோடு அன்யோன்யமாகப் பழக வேண்டுமே என்பதற்காக. உலகக் கோப்பையைத் தவற விட்டேன். அது தூக்குவதற்கு சிரமமாக இருக்கிறதென்பதற்காக அல்ல. ' தன்னைப் போல பிறரையும் நேசி ' என்று இயேசுபெருமான் சொன்னதை மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காக.

உனக்கேன் அக்கறை ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன். ஆறு ஃபீலடரை ஆஃப்சைடில் நிறுத்தி விட்டு பந்து போடச சொன்னால் லெக்ஸ்டம்புக்கு வெளியே பந்து போடும் பரதேசிகளால் பாதிக்கப்பட்டேன். செத்த பாம்பு போல பெர்முடா கிடைத்தால் ' சாத்து சாத்தென்று' சாத்திவிட்டு தேவை வரும்போது மட்டும் 'வெயில் தாங்கலை 'ன்னு பெவிலியனுக்கு ஓடும் 'மாஸ்டர் பிளாஸ்டர்களால் ' பிளாஸ்டர் போட்டுக் கொள்ளும்படி பாதிக்கப்பட்டேன்.

கேளுங்கள் என் கதையை. என் வீட்டில் கல்லெறியுமுன் தய்வுசெய்து கேளுங்கள் என் கதையை....."


"நாயகன்" பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்..??!!

" அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்.
கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலோ மீட்டர் ஓடிப் போய் பந்தைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்துறேன். ஆஃப்சைடுலதான் அடிப்பான்ன்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால்வடை வைக்குற மாதிரி 'ஸ்லிப் ' வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்தனே. அவனை நிறுத்தச் சொல நான் நிறுத்துறேன். நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் 'நோபால் ' போட்டான் பாரு டெண்டுல்கர். அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல். நான் நிறுத்துறேன்.எந்தப் பக்கம் அடிச்சாலும் அந்தப் பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு. அதை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்குறானுங்க பாரு. அதை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறேன். புறப்படும்போதே "க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். அந்த பரதேசியை நிறுத்தச் சொல். எல்லாத்துக்கும் மேலா , எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வெவஸ்தை கெட்டவனுங்க. அவனுங்களை நிறுத்தச் சொல். அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்.. "


நீங்கள்தான் தேசத் துரோகிகள் - ராகுல் திராவிட் அறிக்கை

" இப்ப என்ன குடிமுழுகிப் போச்சு? நாங்க தோத்ததுனால இனிமே பசங்க பரிட்சை நேரத்துல டிவி முன்னால உக்காராம படிப்பானுங்க. ராத்திரி முழுக்க கண்முழிச்சு டிவி பார்த்துட்டு காலைல ஆபிசுல தூங்காம இருப்பானுங்க( ?!) ராத்திரி முழிக்கிறதால நாட்டுக்கு மின்சார செலவு மிச்சம். வேளாவேளைக்கு தூங்குறதால உடம்புக்கு நல்லது. நடுராத்திரில டிவிபாக்குறதுக்காக டீ ,காப்பி , நொறுக்குத்தீனி மாதிரி வெட்டிச்செலவு கிடையாது. வேளைகெட்ட வேளையில் தூங்கப்போறதால ஜனத்தொகை பெருக இருந்த வாய்ப்பும் கொறஞ்சு போகுது. இப்படி எவ்வள்வோ நாட்டுக்காக எவ்வள்வோ பெரிய தியாகம் செஞ்சும் என் வீட்டு மேல கல்லடிக்குற நீங்க எல்லாம்தான் தேசத் துரோகிகள்" - என்று ராகுல் திராவிட் உருக்கமாக அறிக்கை விட்டிருக்கிறார்.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails